ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சமே வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு காரணம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து
May 26 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மடியில் கனம் இல்லை என்றால் வழியில் ஏன் அச்சப்பட வேண்டும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்து சீமான் உடல் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் மீது தவறு இல்லை என்றால் ஏன் சோதனை நடத்த வந்த அதிகாரிகளை திமுகவினர் அனுமதிக்க மறுத்தனர் என்றும், அப்படியெனில் அவர்களிடம் பிழை இருப்பதாக தானே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.