கிருஷ்ணகிரி அருகே மின்கம்பத்தை மாற்றி அமைக்‍காமல் கழிவுநீர்க்‍ கால்வாய் கட்டப்பட்டதால் பொதுமக்‍கள் அதிருப்தி

May 26 2023 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்‍கப்பட்டதால், பொதுமக்‍கள் அதிருப்தி அடைந்தனர். ஊத்தங்கரை பேரூராட்சிக்‍குட்பட்ட மருதம் நகரில், கழிவுநீர்க்‍ கால்வாய் அமைக்‍கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள், சாலையின் ஓரமாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், அதன் நடுவிலேயே கழிவுநீர்க்‍ கால்வாய் அமைத்துள்ளனர். இதனால், கழிவுநீர்க்‍ கால்வாயின் நடுவே உள்ள மின்சார கம்பம் சரிந்து விழுந்துவிடும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்‍கள் அச்சம் தெரிவிக்‍கின்றனர். மேலும் தரமற்ற முறையில் நடைபெற்று வரும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என பொதுமக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00