காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கு : தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த 11 பேரின் தண்டனை குறைப்பு
May 26 2023 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு விடுதலை படை அமைப்பினர், கடந்த 1997-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், விசாரணையின் போது 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ல் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 10 ஆண்டு தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.