கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் நிதி நிறுவன அதிபரும், மாநகராட்சி துணை மேயருமான தாரணி சரவணனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை - 100-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர், துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு

May 29 2023 9:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக முழுவதும் 4-வது நாளாக இன்றும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூரில் அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்களில் முதல்நாள் நடைபெற்ற சோதனையில் எடுக்கப்பட்ட ஆவணங்கள், கரூர் வருமானவரி அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கரூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் வடக்கு காந்திகிராம பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் - சோபனா தம்பதியர் வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் அரசு மதுக்கடைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கி வரும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சச்சிதானந்தம் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் 4-வவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் சங்கர் ஆனந்த் என்பவரின் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்டுகளில் 4-வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு, பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரின் உறவினருக்கு சொந்தமான பிரம்மாண்ட வீட்டில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 2 ஏக்கர் நிலபரப்பில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று கார்களில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் துணையோடு சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00