அரசு விதியை மீறி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதால் வெடித்தது சர்ச்சை : விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

Jun 7 2023 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு விதியை மீறி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை என கூறி சிறார்கள் போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை குழந்தை தொழிலாளர்கள் என சட்டம் வரையரை செய்துள்ளது. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட விடலைப் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களது குடும்ப பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகளில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குட்பட்வர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்த பணிகளிலும் அவர்களை அமர்த்துவதை தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் அமர்த்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆவின்பால் மற்றும் உப பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், உற்பத்தியை பெருக்க கோடை காலத்தில் ஐஸ் கிரீம் விற்பனை பெருக்குவதற்காக தற்காலிகமாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது வழக்கம்.

இதன்படி கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான ஹரி ராம் எனும் நிறுவனத்தில் இருந்து ஆவின் பால் பண்ணைக்கு தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் சென்னை ஆவடி , கொரட்டூர் ,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறார்களும் இருந்துள்ளனர். சிறார்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஒப்பந்த நிறுவன உரிமையாளரான கோவிந்தராஜிடமும், ஆவின் நிர்வாக மேலாளர் ராஜசேகர் என்பவரிடமும் சிறார்கள் பலமுறை முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில் சிறார்கள், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல், மே மாத சம்பளத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்து வந்ததாகவும் இதுகுறித்து கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறார்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளிக்கு செல்லும் தாங்கள் இந்த வருமானத்தில் தங்களுக்கு தேவையான சீருடைகள் பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த எண்ணி இருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் இது அனைத்தும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பரபரப்பு புகார்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது சிறார்கள் பனியில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00