விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து - விநாயகப்பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும் என வாழ்த்து
Sep 17 2023 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துச் செய்தியில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம்பூ, அரளி மலர் மாலைகள் அணிவித்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை வணங்கி, புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
வினை தீர்க்கும் ஆனை முகனான விநாயகப்பெருமான் அவதரித்த இந்நன்னாளில் தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீச, விவசாய மகசூல் பெருக, அராஜகம் அழிய, அமைதி தவழ அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வாழ , மக்களாட்சி மலர வேண்டும் என்று விநாயகப்பெருமானை பிரார்த்திப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக விளங்கும் வேழமுகத்து விநாயகப்பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும் - சகோதரத்துவம், மனிநேயம் தழைக்கட்டும்- வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும்- நாடெங்கும் துரோக சிந்தனைகள் அழிந்து, உண்மைகள் உயிர் பெறட்டும் - இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.