"வரும்போது சாப்பாடு வாங்கிட்டு வாங்க... போலீஸ் கிட்ட மட்டும் போயிடாதீங்க" : கடலூர் அருகே செல்போனை திருடிச் சென்று போன் செய்து மாட்டிக் கொண்ட திருடன்
Sep 21 2023 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் அருகே செல்போனை திருடிச் சென்றதுடன், செல்போன் உரிமையாளரிடம் சாப்பாடு வாங்கிட்டு வாங்க என பேசிய திருடனின் ஆடியோ வைரலாகி வருகிறது. திராசு பகுதியை சேர்ந்த ஏழைப்பெருமாள் என்பவர், தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்த நிலையில், வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் ஏழைப்பெருமாளின் செல்போனை திருடிவிட்டு தப்பியுள்ளார். பின்னர் ஏழைபெருமாள் அவரது மனைவியின் செல்போனில் இருந்து அவரின் செல்போனிற்கு தொடர்புக் கொண்டுள்ளார். அந்த அழைப்பில் பேசிய திருடன், செல்போன் வேண்டும் என்றால் பணம் எடுத்துக் கொண்டும், உணவு வாங்கிட்டு வருமாறும் கூறியுள்ளார். தற்போது, இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.