திருவண்ணாமலையில் காலை 8 மணி முதலே வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் : 3-வது நாளாக சர்வர் முடங்கியதால் மனு நிராகரிக்கப்பட்டற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பு
Sep 21 2023 6:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்கப்பெறாத பெண்கள் தங்களது மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மறு பதிவுக்கு விண்ணப்பிக்கவும் ஆட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் காலை 8 மணி முதலே குவிந்தனர். ஆனால் 3 வது நாளாக சர்வர் முடங்கியதால் பயனாளிகளிடம், ஆதார் எண், செல் நம்பர் ஆகியவற்றை வட்டாட்சியர் சரளா எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பினார். இதனால் பதிவு செய்ய வந்த மகளிர் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.