சிறைகளில் சட்டவிரோத செயல்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க முடிவு : அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை சார்பில் கடிதம்
Nov 20 2023 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறைகளில் நடைபெறும் மோதல்கள், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க சிறை துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறை வளாகங்களில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறைவளாகத்தில் மோதல்கள், செல்போன்கள் உபயோகம் மற்றும் கஞ்சா பயன்பாடு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது. இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகம் முழுவதும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்புதலை பெற தமிழக அரசுக்கு சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.