முல்லைபெரியாற்றில் உள்ள குடிநீர் உறைகிணறுகள் சேதமடைந்திருப்பதாக புகார் : தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
Nov 20 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி முல்லைபெரியாற்றில் உள்ள குடிநீர் உறைகிணறுகள் சேதமடைந்திருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கம்பம் அருகே சுருளிப்பட்டியில் ஓடும் முல்லைபெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள 5 உறைகிணறுகள் சேதமடைந்து ஆற்று நீர் நேரடியாக உறைகிணறுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. மேலும் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் சேற்று நீரும், கழிவு நீரும் ஆற்றில் நேரடியாக கலப்பதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே உறை கிணறுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.