இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் : சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேருக்கு வரவேற்பு
Nov 21 2023 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 64 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவர்களில் 63 பேரை கடந்த நவம்பர் 9ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக 15 பேர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.