சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை : வெள்ளி கிராமுக்கு ரூ.40காசுகள் அதிகரித்து ரூ.79.40க்கு விற்பனை
Nov 21 2023 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 730 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.