என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திட்டப் பணிகளை நிறுத்தக்‍ கோரிக்‍கை : உழவர்களின் விவசாய நிலங்களை பறிப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Nov 21 2023 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்‍காத நிலையில், அடுத்தக்கட்டமாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்களை பறிக்க என்.எல்.சியும், தமிழக அரசும் இணைந்து திட்டமிட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளளர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முதன்முதலில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்‍கு உரிய விலையும் கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். என்.எல்.சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது என தெரிவித்துள்ளார். மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு துணை போய் மக்களுக்கு அநீதி இழைத்து விடக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00