சிவகங்கை அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரக்கொலை : வீட்டை விட்டு காதலனுடன் சென்றதால் அண்ணன் வெறிச்செயல்
Nov 21 2023 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வீட்டை விட்டு காதலனுடன் சென்று தங்கையை அண்ணனே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ராமு என்பவருக்கு, கண்ணன் என்ற மகனும், தேவயானி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவையானி, தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஓரிரு நாட்களில் காதலனை விட்டுவிட்டு வீட்டிற்கே திரும்பியுள்ளார். இதனால் தேவயானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் கண்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தங்கை தேவயானியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அவரை கைது செய்துள்ள போலீசார், தேவயானியின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.