மதுரை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பதால் செத்து மிதக்கும் மீன்கள் : துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி
Nov 21 2023 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை தெப்பக்குளத்தில் 2வது நாளாக செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருகிறது. மதுரை தெப்பக்குளத்திற்கு கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படும் வைகை ஆற்றின் நீர், கழிவுநீரோடு சேர்ந்து செல்கிறது. இதனால், தெப்பக்குளத்தில் நேற்று கொத்து கொத்தாக செத்து கிடந்த மீன்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில், 2வது நாளாகவும் இன்றும் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.