கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் : தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
Nov 21 2023 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக சூளகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வீசப்படுகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று பரவும் சூழலும் உருவாகியுள்ளது.