தடை செய்யப்பட்ட சிறிய ரக மீன்களை பிடித்து வந்து விற்பனை : கேரள விசைப்படகு மீனவர்களின் செயலுக்கு குமரி மீனவர்கள் கண்டனம்
Nov 21 2023 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை பிடித்து வந்து கேரள மீனவர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சிறிய ரக மீன்களை பிடிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கேரள விசைபடகு மீனவர்கள், சிறிய ரக மீன்களை பிடித்து வந்து தேங்காய்பட்டடினம் துறைமுகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லையென அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.