ஓமனில் சிறை வைக்கப்பட்ட 17 மீனவர்களை மீட்கக் கோரிக்கை : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
Nov 21 2023 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓமன் நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 17 பேரை மீட்க வேண்டுமென உறவினர்கள், குமரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 17 மீனவர்கள் ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். அப்போது சம்பளப் பிரச்சனை காரணமாக ஒருவர் தங்களை சிறைபிடித்து வைத்துள்ளதாகக் கூறி, கைப்பேசி பதிவுகளை மீனவர்கள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு 17 மீனவர்களையும் மீட்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.