திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் மின்கசிவால் கிரைண்டர் வெடித்து தீ விபத்து : வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரொக்கம் எரிந்து சாம்பல்
Nov 21 2023 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கூலித்தொழிலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக கிரைண்டர் வெடித்து தீ பற்றியதில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. நிலக்கோட்டையை அடுத்துள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பாப்பாத்தி. இவர் வழக்கம் போல் நேற்று வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது சுவிட்ச் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டு அலறிய பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போராட்டி தீயை அணைத்தார். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் எரிந்து சேதம் அடைந்தது.