புதுக்கோட்டை அருகே சாலைகளில் தெரு நாய்கள், மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதி : விபத்து நிகழ்வதற்கு முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Nov 21 2023 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திருப்பத்தூர் சாலையில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் மற்றும் மாடுகள் சாலை நடுவே சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், சாலையிலேயே தெருநாய்களும், மாடுகளும் படுத்துக் கொள்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.