'பறவைகள் சரணாலயம் எல்லாம் காதலர்கள் சரணாலயமாக மாறிவிட்டது' : அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
Nov 21 2023 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் தற்போது காதலர்கள் சரணாலயமாக மாறிவிட்டது என அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி, பறவைகள் சரணாலயங்கள் எல்லாம் தற்போது காதலர்கள் சரணாலயமாக மாறிவிட்டது என கூறினார்.