நீலகிரியில் வீடு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து கரடி அட்டகாசம் : கூண்டு வைத்தும் கூட கரடியை பிடிக்க முடியாததால் மக்கள் அச்சம்
Nov 21 2023 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, வீடு மற்றும் கடைகளின் கதவுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பந்தலூர், அத்திக்குன்னா, உப்பட்டி, இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் கரடி ஒன்று இரவு நேரத்தில் புகுந்து அட்டாகசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அத்திக்குன்னா பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் உலா வந்த கரடி வீடு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள், கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.