திருவண்ணாமலையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கங்கத்தினர் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்

Nov 21 2023 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கங்கத்தினர் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 'அப்போது விளம்பர அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் விவசாய விரோத செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00