தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்பதை திமுக அரசு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருப்பதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள தொலைக்காட்சி செய்தியாளர் திரு.வானமாமலையின் மனைவி திருமதி லட்சுமி நடத்திவரும் ஜெராக்ஸ் கடை மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கும் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது - தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்பதனை திமுக தலைமையிலான அரசு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் திரு. வானமாமலையின் மனைவி திருமதி லட்சுமி, நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதாகவும், இன்று காலை வழக்கம்போல் திருமதி லட்சுமி, தனது கணவருடன் கடையை திறந்து வைத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கடையை நோக்கி 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கின்றன - வீசப்பட்ட வெடிகுண்டுகள், கடவுளின் அருளால் வெடிக்காததால் இன்றைக்கு அவர்கள் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர் - இந்த சம்பவத்தை நேரில் கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தமிட்டதால் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தெரிய வருகிறது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வேறுபாடுகளால் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதில் சின்னத்துரை என்ற மாணவனையும், அவரது சகோதரியையும் சக மாணவர்களே அரிவாளால் தாக்கிய கொடூரம் நடந்தது - இந்த சமூக விரோத செயல் தொடர்பான செய்திகளை திரு.வானமாமலை தொலைக்காட்சியின் மூலமாக ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் - அன்று முதலே செய்தியாளர் வானமாமலைக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்துள்ளதாக தெரியவருகிறது - இந்த சூழ்நிலையில் இன்றைக்கு அவரது மனைவியின் கடையில் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது - பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற சமூகவிரோத செயல்கள் ஊடக சுதந்திரத்தையே உருக்குலைக்கும் வகையிலும், செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது - பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்படும்போதுதான் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் தேவைகள் என்னவென்று அனைவராலும் அறிந்துகொள்ளமுடியும் - அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை இன்றைய ஆட்சியாளர்கள் உறுதி செய்திட வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சிகாலங்களில் பத்திரிகையாளர்கள் எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக பணியாற்றினர் - ஆனால், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை ஏற்பட்டுவிடும் - இதனை இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியும் தவறாமல் கடைபிடித்து வருகிறது என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு சட்டவிரோத, அராஜக செயல்களாலும், அத்துமீறல்களாலும் பாதிக்கப்படுகின்ற அப்பாவி பொதுமக்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தை நாடிவந்து புகார் அளிக்கும்போது அதனை ஏற்க மறுப்பதாகவும், அவ்வாறு பெற்றுக்கொண்டாலும் முதல் தகவல் அறிக்கை வழங்கப்படுவதில்லை என்றும் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் - காவல் நிலையங்களில் புகார் அளிப்பவர்களுக்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்று புரியவில்லை - அவ்வாறு அனைவருக்கும் முதல் தகவல் அறிக்கை வழங்கி வழக்குகளை பதிந்துவிட்டால், தமிழகத்தில் நடைபெற்றுவரும் குற்றச்செயல்களின் உண்மையான எண்ணிக்கை அனைவருக்கும் தெரிந்துவிடும் என்ற எண்ணத்தில் திமுக ஆட்சியாளர்கள் காவல்துறையினரை ஏதும் கட்டுப்படுத்துகிறார்களா? என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர் - எனவே திமுக தலைமையிலான அரசு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் - மேலும், திமுக தனது சொந்தக்கட்சியினரை கட்டுப்படுத்தினாலே, தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என தமிழக மக்கள் கருதுகின்றனர் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி செய்தியாளர் திரு.வானமாமலை குடும்பத்தினர் மீது நாட்டுவெடிகுண்டு வீசி கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.