சேலம் அருகே கதண்டு கடித்து தலைமையாசிரியை, மாணவன் உட்பட 6 பேர் காயம் : திருமண நிகழ்விற்காக வாழை மரங்களை வெட்டியபோது விபரீதம்
Nov 21 2023 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில் வாழைமரம் வெட்டியபோது விஷ கதண்டு கடித்ததில் தலைமையாசிரியை, மாணவன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். ஆத்தூர் அருகே சொக்கநாதபுரத்தில் மதியழகன் என்பவரின் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களை திருமண நிகழ்விற்காக வெட்டியுள்ளனர். அப்போது மதியழகன், விஜய், லோகநாதன், வரதாஜ் மற்றும் அவ்வழியே சென்ற தலைமையாசிரியை நிர்மலா, மாணவன் பௌசிக் ஆகியோரை விஷ கதண்டு தாக்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் 6 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.