நெல்லை அருகே மீன் பண்ணையில் உலா வந்த ராஜநாகத்தால் மக்கள் அச்சம் : சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
Nov 21 2023 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மீன் பண்ணையில் உலா வந்த ராஜநாகத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, அரிய வகை பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குள் உள்ளன. இந்நிலையில், மணிமுத்தாறு மீன் பண்ணை அலுவலகம் அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.