உதகையில் பேருந்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசுப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
Nov 21 2023 7:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் உதகையில் பேருந்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள், அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குளிச்சோலை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதேபோல் குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.