உத்தரகண்ட் சுரங்க பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சி : தொழிலாளர்களை மீட்டெடுக்க அயராது கடினமாக உழைத்த மீட்பு குழுவினர்களுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Nov 29 2023 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகண்ட் மாநில சுரங்க பாதையில் கடந்த 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை மீட்டெடுக்க அயராது, கடினமாக உழைத்த மீட்புக்குழுவினர்கள் அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உத்தரகண்ட் மாநில சுரங்க பாதையில் கடந்த 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களை மீட்டெடுக்க அயராது, கடினமாக உழைத்த மீட்புக்குழுவினர்கள் அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்‍களை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நமது தேசத்தில் உள்ள ஒவ்வொருவரின் பிரார்த்தனையின் விளைவாக இத்தகைய சரித்திர சாதனை நிறைவேறியதை எண்ணி நாம் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம் என்றும்,

இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய கடவுளுக்கு நன்றி எனவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

தன்னம்பிக்கையுடனும், மிகுந்த மனஉறுதியுடனும் இருந்து, கடந்த 17 நாட்களாக சந்தித்து வந்த மரணப் போராட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் அனைவரும்,

தங்கள் குடும்பத்தினர்களோடு சந்தோஷமாகவும், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00