காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : தமிழகத்தின் பிறபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 29 2023 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்கு அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடலில் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிப்பதால், நாளை தான் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன் பின்னர், வடமேற்கு திசையில் அது நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆழ்க்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே சென்னையில் நள்ளிரவு பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக, முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00