சென்னை தி.நகரில் நகைப்பட்டறையில் 6 கிலோ உருக்கிய தங்கம் திருட்டு : சந்தேகத்தின் பேரில் கடை ஊழியர்கள் 6 பேரை பிடித்து மாம்பலம் போலீசார் விசாரணை

Nov 29 2023 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தியாகராய நகரில் நகைப் பட்டறையில் இருந்து 6.4 கிலோ தங்கம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராயநகர் ராமேஸ்வரம் ரோடு பகுதியில் நந்தகுமார் ஜக்தாப் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் தரைத் தளத்தில் நகை பட்டறை வைத்து நடத்தி வரும் அவர், நகை கடைகளில் உள்ள பழைய நகைகளை வாங்கி உருக்கி 24 கேரட் புதிய நகைகளாக மாற்றிக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

இரவு 11 மணி அளவில் பட்டறையை மூடிவிட்டு, அலுவலகத்தில் வேலை செய்யும் 6 பேர் மட்டுமே உள்ளே தங்கி இருந்தனர். இந்நிலையில் காலை பட்டறைக்கு வந்து நந்தகுமார் பார்த்த போது, அலுவலகத்தில் உருக்கிய நிலையில் இருந்த 6.4 கிலோ தங்கம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நகை பட்டறை ஊழியர்களான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்வின் உத்தம், மாதேவ், ரோகித், அனில், விநாயக் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 கிலோ நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00