புரட்சித்தலைவி அம்மாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி செலுத்துகிறார் : ஜாதிமத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு

Nov 29 2023 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, டிசம்பர் 5-ம் தேதி அன்று, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தன் இறுதிமூச்சு வரை பாடுபட்டவர் - உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எந்நாளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் -

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் வகுத்துக்கொடுத்த பாதையில் அடிபிறழாமல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி, அதே வழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவர்களது நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழகத் தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மாவை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளம்சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00