சென்னை புரசைவாக்கத்தில் இரும்பு தொழிற்சாலை நடத்திவரும் ஜெயின் சகோதரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் மகேந்திரா பி ஜெயின் மற்றும் அவருடைய சகோதரர் ரமேஷ் குமார் ஜெயின் ஆகியோர் வீடுகளில் ரெய்டு

Nov 29 2023 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்ட விரோத பண பரிமாற்றப் புகார் தொடர்பாக சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள அதே வேளையில், வருமான வரித்துறையினரும் ஒருபக்‍கம் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் சமீபத்தில் சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறையாக கணக்கு காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை புரசைவாக்கம் பிரிக்லின் சாலையில் உள்ள TVH லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்‍கும் சேலம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் மகேந்திரா பி ஜெயின் என்பவரது வீட்டிலும், அவரது தம்பி ரமேஷ்குமார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல், புரசைவாக்கம் லெட்டாங் சாலையில் உள்ள ஜெயின் லால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்‍கும் ஜெயந்த் லால் என்பவர் வீட்டிலும் அமலாக்துறை சோதனை நடைபெறு​கிறது. ஜெயந்த் லாலின் மனைவி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதன் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்று ஓட்டேரி, கொத்தவால்சாவடி, பூக்கடை, ஏழு கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்‍கத்துறை சோதனைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை முடிவில் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது, எவ்வளவு கோடி ரூபாய் சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தொடர்பான தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00