புரட்சித்தலைவி அம்மாவின் 7-ம் ஆண்டு நினைவு நாள் : தொண்டர்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா வேண்டுகோள்

Dec 4 2023 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு நாளினை முன்னிட்டு மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு நாளை நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இயலாத சூழ்நிலை இருப்பதை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கனத்த இதயத்துடன் தெரிவித்துள்ளார். நாளைய தினம் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கழகத் தொண்டர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அன்பு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக நாளை முற்பகலில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது - நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய்விட்டதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நாளை மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இயலாத சூழ்நிலை இருப்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில், கழக தொண்டர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, யாரும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

எனவே, புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு நாளைய தினம் கழகத்தொண்டர்களும், புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்ட அனைவரும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00