முதலமைச்சர் ஜெயலலிதா, தொடங்கி வைத்த "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்" திட்டம் : தமிழகம் முழுவதிலும், பரிசுப் பெட்டகங்களை பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

Sep 14 2015 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தொடங்கி வைத்த "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்" திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதிலும், அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றைப் பெற்றுக்கொண்ட தாய்மார்கள், முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி. ஜெ ஜெயலலிதாவின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களான, திருத்தி அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்" வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நடப்பாண்டில் 67 கோடி ரூபாய் செலவில் "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை, கடந்த 7ம் தேதி வழங்கினார்.

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் 'சௌபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் ஆகிய 16 வகையான பொருட்கள் உள்ளன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு, அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தினை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி வழங்கினார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தினை, அமைச்சர் திரு P. பழனியப்பன் வழங்கினார்.

இதேபோல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 111 குழந்தைகளின் தாய்மார்களுக்கும் பரிசுப்பெட்டகங்களை அமைச்சர் வழங்கினார். பரிசுப் பெட்டகங்களை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு, அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. ப. மோகன், டாக்டர் காமராஜ் M.P., திரு. ராஜேந்திரன் M.P. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரிசு பெட்டகத்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் நெஞ்சம்நெகிழ முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த 51 குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்களை, அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன், திருமதி. சத்தியபாமா M.P., மேயர் உள்ளிட்டோர் வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை அமைச்சர் திரு. P. தங்கமணி வழங்கினார்.

கோவை மாவட்டம் கஞ்சம்பட்டி மற்றும் கோலார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன், திரு. C. மகேந்திரன் M.P., ஆகியோர் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்களை தாய்மார்களிடம் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 8 குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்களை டாக்டர் P. வேணுகோபால் M.P. வழங்கினார். பரிசுப் பெட்டகங்களை பெற்றுக் கொண்ட தாய்மார்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை, அறந்தாங்கி, நாகுடி, ஆவுடையார்கோவில், காரையூர், பனையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சோளிங்கர் அரசு மருத்துவமனை, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சுமைதாங்கி, புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு திரு. திருத்தணி கோ. அரி M.P., மற்றும் கழக நிர்வாகிகள் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகங்களை வழங்கினர்.

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சோழவந்தான் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறந்த 129 குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம், பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 92 குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் பிறந்த 20 குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00