கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா சார்பில், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் நீர்மோர் பந்தல்கள் திறந்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்

Mar 20 2017 8:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா சார்பில், துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் நீர்மோர் பந்தல்களை திறந்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டக்கழகம் சார்பில் நீதிமன்ற வளாகம் மற்றும் சிவன் கோயில் பகுதியில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பழரசம், இளநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதேபோல், கோவில்பட்டி லாயல்மில் காலணி பகுதியில் நீர்மோர் பந்தலை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டக்கழகம் சார்பில், தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை அமைச்சர் திரு. G. பாஸ்கரன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து நீர்மோர், குளிர்பானம், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகரக் கழகம் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், தர்பூசணி, பழரசம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. பாலகிருஷ்ண ரெட்டி உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரக் கழகம் சார்பில், கடைவீதி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா திரு. தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பழரசம், இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில், பார்வதிபுரம் பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு மோர் உட்பட பழ வகைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில், கச்சேரிமேடு ரவுண்டானா அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. பின்னர் தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருக்கோவிலூர், மனம்பூண்டி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. பின்னர் இளநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சிறுவாபுரி, தச்சூர், புதுவயல் ஆகிய பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00