மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : வளர்ச்சித் திட்டப்பணிகளும் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன

Mar 20 2017 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. வளர்ச்சித் திட்டப்பணிகளும் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்ட மினி டிப்பர் வாகனத்தை அமைச்சர் திரு.ஆர்.காமராஜ், கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 805 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட குருவாலப்பர் கோவில் வடக்கு மற்றும் தேவாமங்களம் கிராமங்களில் பகுதி நேர நியாயவிலைக் கடையினை அரசு தலைமைக் கொறடா திரு.தாமரை எஸ்.ராஜேந்திரன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு அண்மையில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், ஆயிரத்து 717 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மா.சந்திரகாசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், உலர்தீவன கிடங்கு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான தீவனங்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2863.00 Rs. 3032.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00