அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் TTV தினகரனுடன், இந்தியக் குடியரசுக் கட்சி, பசும்பொன் மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் சந்திப்பு : டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு - பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெறுவது உறுதி
Mar 20 2017 9:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரனை, இந்தியக் குடியரசுக் கட்சி, பசும்பொன் மக்கள் கழகம், உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் சந்தித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர். ஆர்.கே. நகர் தொகுதி மக்களும் பேராதரவு அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திரு. TTV தினகரன் அமோக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் தலைமையில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. K. நாகராஜன், துணைத் தலைவர் திரு. தலித் E. முருகன், அமைப்புச் செயலாளர் திரு. மு.ச. சுடர்குரு, தொழிற்சங்கச் செயலாளர் திரு. D. இருதயநாதன், இளைஞர் அணிச் செயலாளர் திரு. K. மங்காபிள்ளை, தலைமை நிலையச் செயலாளர் திரு. அதே. சேகர், மாணவர் அணிச் செயலாளர் திரு. G.K. ராஜன், மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி தலித் N. மலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரனை சந்தித்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திரு. TTV தினகரனுக்கு, தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரனை, தெஷ்ண மாற நாடார் சங்கத்தின் தலைவர் திரு. D.R. சபாபதி நாடார் தலைமையில், அச்சங்கத்தின் செயலாளர் திரு. R. சண்முகவேல் நாடார், இயக்குநர்கள் திரு. V.S. கணேசன் நாடார், திரு. V.S.T.B. ராமர் நாடார், திரு. R. தினகரன் நாடார், திரு. சவுந்தரராஜன் நாடார், திரு. V.S. வேல் ஆதித்தன் நாடார், திரு. V. தங்கவேல் நாடார், திரு. V. ராதாகிருஷ்ணன் நாடார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து, ஆர்.கே. நகர் தொகுதியில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு தங்கள் சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. N. மகேஷ் என்கிற மகேஸ்வரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் திரு. T. ஜஸ்டஸ் ராஜா, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் திரு. A.C.M. மருதுபாண்டியன், நீலகிரி மாவட்ட துணை பொறுப்பாளர் திரு. S.R. சிவசுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்ட துணை பொறுப்பாளர் திரு. B. பிரபு, பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர் திரு. M. ஜாசகான் ஆகியோர், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, தாம்பரம் நகரக் கழக முன்னாள் செயலாளர் திரு. ம. கரிகாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரனை, தென்னிந்திய திப்புசுல்தான் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. திண்டுக்கல் சர்தார் தலைமையில், பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் திரு. கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் திரு. மதன், அமைப்பாளர் திரு. செரியன், செயலாளர் திரு. அன்பரசன், துணைச் செயலாளர் திரு. வினுசக்ரவர்த்தி ஆகியோர், அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் சந்தித்து, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு பேரவையின் ஆதரவைத் தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. அ. தமிழ்மகன் உசேன் உடன் இருந்தார்.
பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. ச. இசக்கிமுத்து தலைமையில், அக்கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் திரு. மணியாச்சி K.K. ரமேஷ் பாண்டியன், அமைப்புச் செயலாளர் திரு. K. பாண்டித் தேவர், சென்னை மண்டலச் செயலாளர் திரு. தங்கராஜ பாண்டியன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் திரு. திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தலைமைக் கழகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரனை சந்தித்து, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு, தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனர்.
ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன், தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் வெற்றிக்கு அயராது பாடுபடுவது என, பிரமலைக்கள்ளர் எழுச்சி பாசறை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெறுவார் என தெரிவித்தார்.