டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க கழக நிர்வாகிகளைக் கொண்ட 2 குழுக்கள் அமைப்பு : கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு

Mar 20 2017 9:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க, கழக நிர்வாகிகள் பங்குபெறும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர், சின்னம்மா ஒப்புதலோடு, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு. TTV தினகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடவுள்ள தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகொண்டு பணிகளை நெறிப்படுத்த, கழக நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இக்குழுவில், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். வைத்திலிங்கம் M.P., கழக அமைப்புச் செயலாளர், அமைச்சர் திரு. P. தங்கமணி, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. சி.வி. சண்முகம், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. K.P. அன்பழகன், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. K.T. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், கழக வேட்பாளர் திரு. TTV தினகரனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்களை ஒருங்கிணைக்கவும், பிரச்சாரத்தின் வியூகங்களை வகுக்கவும் கழக நிர்வாகிகளைக் கொண்ட மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், கழக அமைப்புச் செயலாளர், அமைச்சர் திரு. S.P. வேலுமணி, கழக இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா. வளர்மதி, அம்மா பேரவைச் செயலாளர், அமைச்சர் திரு. R.B. உதயகுமார், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் திரு. ஆர். காமராஜ், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கழக உடன்பிறப்புகளும், தோழமைக்கட்சிகளின் நிர்வாகிகளும் இவ்விரண்டு குழுக்களுடனும் இணைந்து பணியாற்றவேண்டும் என, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00