விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி எடச்சேரி கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை - சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்

Mar 20 2017 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
வானூர் தொகுதி எடச்சேரி கிராம கழுவெளியில், பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் இன்று, கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், எடச்சேரி கிராம கழுவெளியில் 74 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு தேவையான நிலம் இருப்பதால், இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.பறவைகள் சரணாலயம் அமைப்பதற்குத் தேவையான சதுப்பு நிலம் மற்றும் குட்டைகள், பறவைகளுக்குத் தேவையான இரை போன்றவற்றுக்கு வாய்ப்பு இருக்குமானால் பிற இடங்களிலும் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.K.P. அன்பழகன், ஏற்கெனவே, விழுப்புரம் மாவட்டத்தில், அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரி உட்பட 30 கல்லூரிகள் இயங்கி வருவதாகவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்குமானால், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில், அரசு கலைக்கல்லூரி மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், ஜவுளிப்பூங்கா அமைக்க குறைந்தது 50 ஏக்கர் நிலம் தேவை என்றும், தொழில்முனைவோர் முன்வந்தால், சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை அல்லது கொண்டலாம்பட்டி பகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

இன்னொரு கேள்விக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பதிலளிக்கையில், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 200 மருத்துவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் ஆகிய புதிய மாவட்டங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00