கச்சத்தீவை மீட்பதில், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் - சட்டப்பேரவையில் தமிழக அரசு விளக்கம் : தி.மு.க. இதுபோன்று வழக்குத் தொடராமல் மவுனம் காத்தது ஏன்? - கச்சத்தீவு பிரச்னையில், யார் துரோகம் செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் - கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் பதில்

Mar 20 2017 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கச்சத்தீவை மீட்பதில், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், இதற்காக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் இந்தப் பிரச்னையில் யார் துரோகம் செய்தார்கள்? என்பது, மக்களுக்குத் தெரியும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் திரு. ஜெயக்குமார், 1991-ம் ஆண்டு, மாண்புமிகு அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், கச்சத்தீவை மீட்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். கச்சத்தீவை மிட்பதற்கான பல்வேறு போராட்டங்களோடு, சட்டப்போராட்டத்தையும் நடத்தியவர் அம்மா என்றும், இதற்காக 1998-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் அமைச்சர் திரு. ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த 17-ம் தேதி, மத்திய அமைச்சருடன் நிகழ்ந்த சந்திப்பின்போது கூட, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இனி எந்த மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததை எதிர்த்து மறைந்த மாண்புமிகு அம்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், தி.மு.க. இதுபோன்று வழக்குத் தொடராமல் மவுனம் காத்தது ஏன்? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். கச்சத்தீவு பிரச்னையில், யார் துரோகம் செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அமைச்சர் திரு. ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2863.00 Rs. 3032.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00