பன்னீர்செல்வம் அவைக்கு வந்தபோது தி.மு.க. உறுப்பினர்கள்மேஜையை தட்டி வரவேற்றதாக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் - சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தில் தொய்வின்றி உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் விளக்கம்

Mar 20 2017 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது பன்னீர்செல்வம் அவைக்கு வந்தபோது தி.மு.க. உறுப்பினர்கள் அவரை மேஜையை தட்டி வரவேற்றதை, அமைச்சர் காமராஜ் இன்று நினைவுகூர்ந்தபோது, அதனை ஸ்டாலின் முழு மனதோடு ஒப்புக்கொண்டார். இந்த விவாதத்தின்போது தொடர்ந்து பேசிய அமைச்சர் காமராஜ், சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் டென்டர் கோரப்பட்டு, உணவு விநியோகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பொது விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. ஆர். காமராஜ், கடந்த பேரவைக் கூட்டத்தின்போது பன்னீர்செல்வம் வரும்போது தி.மு.க.வினர் மேஜையை தட்டி வரவேற்றதை நினைவுகூர்ந்தார். ஒரு கட்சியின் தலைவரை குறிப்பிடும்போது, அக்கட்சியினர் மேஜையை தட்டி வரவேற்பது இயல்பு என்றும், அதற்கு மாறாக பன்னீர்செல்வம் வந்தபோது, தி.மு.க.வினர் அவரை கைத்தட்டி வரவேற்றது வினோதமாக இருந்தது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், பன்னீர்செல்வம் வந்தபோது கைத்தட்டி வரவேற்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின்போது மானியம் நிறுத்தப்பட்ட போதிலும், மானியத்தை வழங்கி சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்களை மறைந்த மாண்புமிகு அம்மா வழங்கியதாக தெரிவித்தார். தற்போதும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்திற்காக டென்டர் கோரப்பட்டு, அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் திரு. காமராஜ் தொரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00