நாட்டிலே முதன்முறையாக கடன் தள்ளுபடி திட்டம் இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது - விவசாயிகளின் அரணாக அரசு திகழ்கிறது : சட்டப்பேரவையில் அமைச்சர் பெருமிதம்

Mar 20 2017 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டிலே முதன்முறையாக கடன் தள்ளுபடி திட்டம் இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளதாகவும், விவசாயிகளின் அரணாக அரசு திகழ்வதாகவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

சிறு, குறு, நடத்தரவிவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் மட்டுமே தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளதாகவும், பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். நாட்டிலே முதன்முறையாக கடன் தள்ளுபடி திட்டத்தை இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உயிரிழந்த 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி, விவசாயிகளின் அரணாக தமிழக அரசு விளங்குவதாக வருவதாக வேளாண்மை துறை அமைச்சர் திரு. R.துரைகண்ணு தெரிவித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு, 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். குடிநீர் பற்றாக்குறையை போக்க மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஓர் ஆண்டில், ஆயிரம் மதுபானக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி தெரிவித்தார். கோயில்கள், ஆலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 375 மதுபானக் கடைகள் அகற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00