தமிழகத்தில் 122 எம்.எல்.ஏக்கள், 37 எம்.பிக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கும் கழகத்திற்குத்தான் இரட்டை இலைச் சின்னம் சொந்தமானது : அ.இ.அ.தி.மு.க. உறுதி - வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடாது என, ஊடகங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள்

Mar 20 2017 8:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 122 சட்டமன்ற உறுப்பினர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் சொந்தமானது என்றும், இதுதொடர்பாக, சில ஊடகங்கள் வீண் சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும், அ.இ.அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டாக்டர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இலைசின்னம் தொடர்பான பிரச்னையை, சில ஊடகங்கள் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அ.இ.அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக பல்வேறு பிரிவுகள் உள்ளன - அத்தனை பேரும், மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பிறகு மதிப்புக்குரிய சின்னம்மாவை, தலைமை தாங்க அழைத்து அவர் ஒருவரால்தான் இந்த இயக்கத்தை வலிமையாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள் - அமைப்பு ரீதியாக 50 மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவரும் சின்னம்மாவின் தலைமையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் - ஓ.பி.எஸ் பின்னால் சென்ற சில சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு, தவறை உணர்ந்து தாய்வீட்டுக்கு வருவது உறுதி என்றும் டாக்டர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. மதுசூதனன் ஆகியோருக்கு ஆதரவாக வாதிடுபவர்கள், கழகத்தின் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் எத்தனைபேர் அவர்களுக்கு பின்னால் உள்ளனர் என்பதை கூறட்டும் - மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் இடம் எதுவோ அதற்குத்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை கிடைக்கும் - திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், திரு. H. ராஜா போன்றவர்கள், இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வாய்ப்புள்ளது என கூறுவதைப் பார்த்தால், இதற்குப் பின்னால் பெரும் சதி உள்ளதாகவே தெரிகிறது - தேர்தல் ஆணையம் தொடங்கி நீதிமன்றங்கள் வரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்ற அவர்களின் செயல்திட்டம் தமிழக மக்களுக்கு எளிதாகவே புரியும் - துரோகிகளின், எதிரிகளின் கூட்டுச் சதியை முறியடித்து மாண்புமிகு அம்மாவின் புகழையும் இந்த இயக்கத்தையும் தக்கவைத்துக்கொண்டது போல, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரனை, இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றிபெற வைத்து, அ.இ.அ.தி.மு.க. தனது பெருமையை மீண்டும் நிலைநாட்டும் என்றும் டாக்டர் வைகைச் செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00