சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்களுக்கு இடையூரான மத்தியபடை பாதுகாப்பு தேவையா என நீதிபதிகள் கேள்வி - நீதிமன்றம், சிறைவளாகம் போல் காணப்படுவதாக குற்றச்சாட்டு

Mar 20 2017 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்களுக்கு இடையூறான மத்தியப் பாதுகாப்புப்படை தேவையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கடந்த 2015 நவம்பர் 15-ஆம் தேதி முதல், மத்தியதொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு நுழைவாயில் பாதுகாப்பு அம்சங்கள், கருவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், மற்றும் குடியிருப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி டீக்காராமன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின், பாதுகாப்பு தேவைதானா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றங்கள் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாகவே இருக்க வேண்டும் என்றும் ராணுவ நீதிமன்றங்களைப் போன்று இருக்கக் கூடாது என்று தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் இந்த அளவுக்கு சோதனையிடப்படுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு தேவை என மத்திய அரசு கருதினால் அதற்கான செலவுகளை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை வரும் ஜூன் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00