பிரபல தமிழ் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன கருவி மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு

Mar 20 2017 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல தமிழ் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன கருவி மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், தங்கள் மகன் நடிகர் தனுஷ் என்றும், 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, சினிமாவில் நடிப்பதாகக் கூறி, சென்னைக்கு வந்துவிட்டதாகவும், நீண்ட நாள் கழித்து, திரைப்படங்கள் மூலம், தனுஷ் தங்கள் மகன் என தாங்கள் அறிந்துகொண்டதாகவும், வயதான நிலையில் உள்ள தங்கள் வாழ்வாதாரத்திற்கு, உதவி செய்யும்படி, தனுஷுக்கு உத்தரவிடக்கோரியும், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், மேலூர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் சொல்கின்ற அங்க அடையாளங்கள், தனுஷிடம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

அதன்படி, தனுஷிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட உறையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்தனர். மேலூர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், தனுஷின் உடலில் இருப்பதாகக் கூறிய அங்க அடையாளங்கள், நவீன கருவி மூலம் அகற்றப்பட்டுளளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00