கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நேரிட்ட சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்ததற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் : அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

Mar 25 2017 9:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நேரிட்ட சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்ததற்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் நேற்றுவேனும், லாரியும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த, தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த செல்வி மஞ்சு, புங்கரையைச் சேர்ந்த செல்வி சிவரஞ்சினி, சக்தி நகரைச் சேர்ந்த செல்வி தீபா, மண்டைக்காட்டைச் சேர்ந்த திருமதி சங்கீதா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தான் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விபத்தில் மேலும் மூன்று மாணவிகள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00