எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த் - தமிழக மீனவர் பிரச்னை பற்றி இலங்கை அதிபருடன் பேசவிருந்ததாகவும் தகவல்

Mar 25 2017 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பயணத்தை ரத்து செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். பல அரசியல் காரணங்களை முன்வைத்தும், சிலரது அன்பு வேண்டுகோளை ஏற்றும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, வரும் 9-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் உள்ளிட்டோர், ரஜினியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வவுனியாவில் 150 வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவில் தான் கலந்துகொள்ள இருந்ததாகவும், ஏப்ரல் 10-ம் தேதி மரக்கன்றுகளை நடும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன உரிமைக்காக லட்சக்கணக்கான தமிழர்கள் ரத்தம் சிந்திய அந்த வீர மண்ணை வணங்கி, அவர்கள் சுவாசித்தக் காற்றை தானும் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாகவும், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும், அவர்களின் படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களைத் தடுக்கவும், இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். எனினும், திரு. திருமாவளவன், திரு. வைகோ, திரு. வேல்முருகன் ஆகியோரின் அன்பு வேண்டுகோளை ஏற்று, இந்த விழாக்களில் பங்கேற்பதை தவிர்ப்பதாக அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தான் அரசியல்வாதி அல்ல என்றும், மக்களை மகிழ்விப்பதுதான் தனது கடமை என்றும் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், வருங்காலத்தில் இலங்கை செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதனை அரசியலாக்கி, தன்னை போகவிடாமல் செய்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00