ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி - சீமைக் கருவேல மரம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வமுடன்

Mar 26 2017 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீமைக் கருவேல மரம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் அதிகரித்து காணப்படும் சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தற்போது அரசு மூலம் சீமைக் கருவேல மரங்கள் முழுவீச்சில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில், ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை வாயிலிலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் வரை 60 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இப்பேரணியில் மாணவ - மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வழிநெடுகிலும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிரசுரங்களை விநியோகித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00