நீலகிரியில் 400 விவசாயிகளுக்கு 1 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 சதவீத மானியத்தில் நீர்ப்பாய்ச்சும் ஆயில் மோட்டார்கள் வழங்கப்பட்டன

Mar 26 2017 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில், மலைக்காய்கறி பயிரிடும் 400 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 சதவீத மானியத்தில் நீர்ப்பாய்ச்சும் ஆயில் மோட்டார்கள் வழங்கப்பட்டன.

மலை மாவட்டமான நீலகிரியில், பல்வேறு வகையான காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மலைக்காய்கறி பயிரிடும் விவசாயிகள் 400 பேருக்கு, ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 சதவீத மானிய விலையில், நீர்ப்பாய்ச்சும் ஆயில் மோட்டார்கள் வழங்கப்பட்டன. ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் திரு. தீபக் ஸ்ரீவஸ்தவா, மாவட்ட ஆட்சியர் திரு.பி.சங்கர் ஆகியோர் இந்த உபகரணங்களை வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதனிடையே, கூடலூரை அடுத்த கையுண்ணி பகுதியில், 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், காய்கறி விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00