நடிகர் தனுஷை மகன் என சொந்தம் கொண்டாடி தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு

Apr 21 2017 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் தனுஷை உரிமை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மல்லம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், மரபணு சோதனை செய்வதற்கான அவசியம் இல்லையெனவும், வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லையென்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மறு தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தார். நீண்ட வாதத்திற்குப் பிறகு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தனுஷ் தங்கள் மகன் என கதிரேசன் தம்பதியினர் சொந்தம் கொண்டாட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் தனுஷின் சொத்துக்கள் தங்களுக்கு தேவையில்லை எனக்கூறியிருந்த கதிரேசன் தம்பதியர், குடும்ப செலவுக்காக மாதம் 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேலூர் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 15:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

  • REEL PETTI - Jaya Plus

    Sun,Sat : 16:30

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3003.00 Rs. 3212.00
மும்பை Rs. 3025.00 Rs. 3203.00
டெல்லி Rs. 3037.00 Rs. 3217.00
கொல்கத்தா Rs. 3038.00 Rs. 3215.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.50 Rs. 42500.00
மும்பை Rs. 42.50 Rs. 42500.00
டெல்லி Rs. 42.50 Rs. 42500.00
கொல்கத்தா Rs. 42.50 Rs. 42500.00